×

ஈரோடு இடைத்தேர்தலில் விடுபட்ட 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் இன்று தபால் வாக்கு சேகரிப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இன்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என சுமார் 5,681 பேர் உள்ளனர். இதில் 352 பேர் மட்டுமே தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு 12பி படிவம் கடந்த 4ம் தேதி வழங்கப்பட்டது. 352 பேரின் வீடுகளுக்கு கடந்த 16, 17 தேதிகளில் அதிகாரிகள் 6 குழுக்களாக சென்று தபால் வாக்கு சேகரித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தொற்று இருப்பதாக சந்தேகிப்போர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம்.

தபால் வாக்குகளை பெற செல்லும் 6 குழுக்களுடன் வேட்பாளர்களின் முகவர்களும்  உள்ளனர். தபால் வாக்கு பெறும் பணிகள் அனைத்தும் முழுமையாக தேர்தல் ஆணையத்தால் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 352 பேரில் இருவர் உயிரிழந்த நிலையில், 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டன. எஞ்சிய 6 பேரின் வீடுகளுக்கு இன்று அதிகாரிகள் குழு சென்று தபால் வாக்குகளை சேகரிக்கிறது. தபால் வாக்கு செலுத்தும் 352 பேரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க இயலாது.


Tags : Erode Inter-Elections , Erode By-Election, Senior Citizens, Postal Vote
× RELATED ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி...