×

கியூபாவில் மின்சார உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு: மின்சார விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாக கியூபா அரசு தகவல்

ஹவானா: கியூபாவில் மின் உற்பத்தி பெருமளவு பாதிப்பு நேரிட்டு இருப்பதால் அந்நாட்டில் உள்ள 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சார விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 1 வாரம் ஆகுமென்று கியூபா கூறியுள்ளது. கரீபியன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதால் மின் உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவியா அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தலைநகர் ஹவானாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடான்சாஸ் மாகாணத்தில் உள்ள மின்சார உற்பத்தி ஆலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதனால் மக்களின்  வாழ்க்கை பெரிது முடங்கின. அங்குள்ள வீடுகள், தொழிற்சாலைகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சார விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாக கியூபா அரசு கூறியுள்ளது.


Tags : Cuba , Cuba, electricity, production, vulnerability
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்