×

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி; இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

மும்பை: அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் பதம் பார்த்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (20.02.2023) அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

தோல்வியடைந்தால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளது.

2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags : World Cup Women's T20 Cricket Tournament ,India ,Ireland , World Cup Women's T20 Cricket Tournament; India-Ireland clash today
× RELATED அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன்...