×

‘பூத் சிலிப்’ விநியோகம் துவங்கியது

ஈரோடு  கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று துவங்கியது. வரும் 24ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதற்காக, ஒரு  வாக்குச்சாவடிக்கு ஒருவர் எனும் கணக்கில் 238 வாக்குச்  சாவடிகளுக்கும் 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலர்கள் காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக  சென்று, வாக்காளர் விவரங்களை சரிபார்த்து ‘பூத் சிலிப்’ வழங்கி  வருகின்றனர். பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே  வழங்கப்படும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.


Tags : Distribution of 'Booth Silip' started
× RELATED திண்டுக்கல் அருகே 2 உலோகச் சிலைகள் மீட்பு