சிங்காரவேலருக்கு மணிமண்டபம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

சென்னை: விவேகானந்தர் இல்லம் அருகே சிங்காரவேலருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பாரத மக்கள் கழகம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பாரத மக்கள் கழகத்தின் தலைவர் பிரபாகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீனவர் போன்ற பாரம்பரிய தொழில் சார்ந்த சமூகத்தினர் இந்தியாவில் பல பகுதிகளில் இன்னும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஆழ்கடலில் தான் மீன்வளம் அதிகமாக உள்ளது. இருப்பினும் பாரம்பரிய மீனவர்களை புறகணித்துவிட்டு ஆழ்கடல் மீன்வளத்தை பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

ஏற்கனவே, வறுமையில் உள்ள மீனவர்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் தற்போது ஏற்பட்டு வருகிறது. எனவே, மண்டல் குழு பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அரசியல் துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அதேபோல, எல்லோருக்காகவும் போராடியவர் சிங்காரவேலர். அதன்படி அவருக்கு விவேகானந்தர் இல்லம் அருகே மணிமண்டபம் ஒன்றை அமைத்து தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

Related Stories: