×

புதுகை அருகே ஜல்லிக்கட்டு 900 காளைகளுடன், வீரர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்ேகாட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த ஆலத்தூர் நீலியம்மன், அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று காலை 9.10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக களத்தில் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.


Tags : jallikattu , Jallikattu near Pudugai with 900 bulls, warriors wrestling
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...