திருமண ஊர்வலத்தில் ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய மாஜி பஞ். தலைவர்: குஜராத்தில் விநோதம்

காந்திநகர்: குஜராத்தில் நடந்த திருமண ஊர்வலத்தின் போது முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து ரூ. 500 நோட்டுகளை அள்ளி வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் அகோல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கரீம் யாதவ் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து திருமண ஊர்வலம் நடந்தது. திருமண விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த கரீம் யாதவ் மற்றும் அவரது குடும்பபத்தினர் கீழே நின்றிருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசினர்.

திடீரென பணத்தை அள்ளி வீசியதால், திருமண விழாவிற்கு வந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கீழே விழுந்த ரூ. 500 நோட்டுகளை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் ஜோதா அக்பர் என்ற பாலிவுட் திரைப்படத்தின் பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: