×

பிரதமர் மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்த்திருக்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

திருவாரூர்: மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்த்திருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்து கிடக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை அதானி குழுமத்தில் முதலீடு செய்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளது.

இதற்கு மோடி அலுவலகத்தின் அழுத்தமே காரணம். இது குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. சர்வதேச நாடுகள் இதனை கண்டித்து உள்ளது. அதிமுகவை பாஜக இயக்குகிறது, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, ஒன்றரை வருட திமுக ஆட்சிக்கு சான்றிதழ் வழங்கும் தேர்தல். விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்  விவாதம் நடத்தும் அளவிற்கு பணிகள் மந்த நிலையில் உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது” எனக் கூறினார்.

Tags : Adani ,Modi ,Tamil Nadu Congress party ,K.K. S.S. ,Anekiri , Adani has grown under PM Modi's regime, country has failed: Tamil Nadu Congress leader KS Azhagiri alleges
× RELATED தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில்...