11 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி: மிடில் ஓவரில் திட்டமிட்டபடி பந்து வீசவில்லை.! இந்திய அணி கேப்டன் கவுர் பேட்டி

க்கெபெர்ஹா: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில், குரூப் 2 பிரிவில் இந்தியாஇங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹாட்ரிக் வெற்றி அடைந்த இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், \\”நாங்கள் மிகவும் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் மிடில் ஓவரில், திட்டமிட்டபடி பந்துவீசவில்லை, வேகத்தை இழந்தோம்.

பேட்டிங்கில் நாங்கள் நன்றாக விளையாடுகிறோம், ஆனால் துரதிருஷ்டவசமாக ரன் ரேட்டைப் பெற முடியவில்லை. ரேணுகா சிறப்பாக பந்துவீசுகிறார், அவர் பந்து வீசுவதை ரசிக்கிறார். இடையில் மழை வந்தபோது, ​​நாங்கள் 1012 ரன் பின்தங்கியிருந்தோம், ஆனால் மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் களத்தில் இருந்ததால் நம்பிக்கை இருந்தது. இருப்பினும் விக்கெட்டை இழந்ததால் பின்னடைவாக அமைந்துவிட்டது\\” என்றார். இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை அயர்லாந்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு தகுதிபெற முடியும். இன்று பார்ல் நகரில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் மாலை 6.30 மணிக்கு பாகிஸ்தான்வெஸ்ட்இண்டீஸ், இரவு 10.30 மணிக்கு நியூசிலாந்துஇலங்கை அணிகள் மோதுகின்றன.

அரையிறுதியில் ஆஸ்திரேலியா

டி.20 உலக கோப்பையில் 15வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் நேற்றிரவு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாதென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 லீக் போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தென்ஆப்ரிக்கா 3வது போட்டியில் 2வது தோல்வியை சந்தித்தது.

Related Stories: