×

சேப்பாக்கத்தில் மே 14ம் தேதி தோனி பிரியாவிடை போட்டி

சென்னை:10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோதுகின்றன. 41 வயதான டோனி கடைசியாக விளையாடும் ஐபிஎல் தொடர் இதுதான். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி மே 14ம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இது டோனிக்கு பிரியாவிடை போட்டியாக இருக்கும். ஒருவேளை பிளே ஆப்பிற்கு சென்னை தகுதி பெற்றாலும், பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த போட்டி தான் அவருக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : Thoni ,Cheppakkam , Tony farewell match on 14th May in Chepauk
× RELATED மே 24, 26ம் தேதிகளில் சென்னையில்...