×

ஆசிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சீனாவிடம் இந்தியா தோல்வி.! வெண்கல பதக்கத்துடன் வெளியேறியது

துபாய்:ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதின. இந்திய அணி `பி’ பிரிவில் கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகத்தை ேதாற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதியில் ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்தியா நேற்று அரையிறுதியில் சீனாவுடன் மோதியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனாய் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து 02 என பின்தங்கியது. அடுத்து நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை வென்றது. மகளிர் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி சீனாவை வென்றது. இதனால் இந்தியா 22 என சமநிலை வகித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகர், டனிஷா கிராஸ்டோ ஜோடியை சீன ஜோடி வென்று, 32 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா வெண்கல பதக்கத்துடன் வெளியேறியது.

Tags : India ,China , Asian Badminton: India lost to China in the semi-finals! Walked out with a bronze medal
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!