×

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ரன்களை கடந்து கிங் கோலி சாதனை!

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ரன்களை கடந்த 6வது வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் 549 இன்னிங்சில் 25,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்சிலும்,  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 588 இன்னிங்சிலும் 25,000 ரன்களை கடந்திருந்தனர்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் காலிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இந்த சாதனையின் மூலம் குறைந்த இன்னிங்சில் விளையாடி 25,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆனார் விராட் கோலி.


Tags : King Goalie , King Kohli's record of crossing 25,000 runs in international cricket matches!
× RELATED சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த...