பேராசிரியர் க.அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பேராசிரியர் க.அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்;

இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் அவர்கள் நேற்று (18-02-2023) உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

பேராசிரியரைப் போலவே என் மீது மிகுந்த அன்புகொண்டு பழகக் கூடியவர் மணிவண்ணன். அவரை இழந்து வாடும் பேராசிரியரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: