×

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்

சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
இன்று (19.2.2023) திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி (வயது 57) காலமானார் என்ற செய்தி அறிந்து மிக மனவருத்தம் அடைந்தேன். மயில்சாமி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவராவார்.

மேலும் இவர் பலகுரல் மன்னராக திரைத்துறையில் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். மயில்சாமி இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Tags : Mayilsamy ,P. Saminathan , Comedian, Mylaswamy passes away, Minister M. P. Saminathan condolence
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்