மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திரவுபதி முர்மு டெல்லி பயணம்

கோவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பகல் 12.15 மணிக்கு கோயம்பத்தூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. சேலத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: