×

அமாவாசையை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்களின் விலை மீண்டும் உயர்வு: முல்லை, ஜாதி மல்லி ரூ.1000க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ முல்லை ரூ.800க்கும், ஜாதிமல்லி ரூ.800க்கும் பன்னீர் ரோஸ் 100க்கும் சாக்லேட் ரோஸ் 120க்கும் சாமந்தி 100க்கும் சமங்கி 50க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று அமாவாசை என்பதால் ஒரு கிலோ முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.1,000க்கும் சாமந்தி ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.130க்கும் சம்பங்கி ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்தது. மல்லி, ஜாதிமல்லி, முல்லை, கனகாம்பரம், அரளி ஆகியவற்றின் விலை உயர்ந்தது. நேற்று அமாவாசை என்பதால் முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, சம்பங்கி, பன்னீர்ரோஸ் சாக்லேட் ரோஸ் ஆகியவற்றின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று வரை நீடிக்கும். அமாவாசை முடிந்தபிறகு மீண்டும் பூக்களின் விலை குறையும்’’ என்றார்.


Tags : Coimbatore ,Amavasai ,Mullai ,jati , Flower prices rise again in Coimbatore ahead of Amavasai: Mullai, jati malli selling at Rs 1000
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!