மீண்டும் படம் இயக்கும் எஸ்.ஜே. சூர்யா

சென்னை: இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா கடந்த 2015ம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். பின்னர், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா 2’ ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ‘கில்லர்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகிறார். இதைத் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்பட்டது. அவர் நடித்து வரும் படங்கள் இன்னும் முடியவில்லை என்பதால், அதை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் ‘கில்லர்’ ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார்.

Related Stories: