பாலி தீவில் அமலா பால் ஆன்மிக பயணம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை அமலா பால், ‘தலைவா’ படத்தில் தன்னை விஜய் ஜோடியாக நடிக்க வைத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்த அவர், திடீரென்று கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து அவருக்கு தமிழில் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டினார். பிறகு பஞ்சாபி பாடகர் ஒருவரை அமலா பால் 2வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் மீது பாலியல் புகார் அளித்த அமலா பால், தனது பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் இன்னொரு புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக தமிழ் மற்றும் மலையாளத்தில் ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

ஆனால், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால், உடனே அப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட விற்றுவிட்டார். இப்படி சொந்த வாழ்க்கையிலும், திரையுலக வாழ்க்கையிலும் கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டதாலும், திடீரென்று அவரது தந்தை இறந்ததாலும் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக அவதிப்பட்ட அமலா பால், மன அமைதி தேடி புனித ஸ்தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். சமீபத்தில் பழநி மலை முருகன் கோயிலிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட அமலா பால், தற்போது இந்தோனேஷியாவில் இருக்கும் பாலி தீவுக்குச் சென்று, அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி தியானம், வழிபாடு, யோகாசனம், நீதிபோதனை போன்ற பயிற்சிகளைப் பெற்று வருகிறார். அங்கு அவர் 2 வாரங்கள் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அமலா பால் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அவரது தரப்பு மறுத்துள்ளது.

Related Stories: