வடகொரியா ஏவுகணை சோதனை

சியோல்: வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா, நேற்று முன்தினம் அந்நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் வடகொரியா நேற்று நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது எந்த வகையிலான ஏவுகணை, எவ்வளவு தூரம் சென்று தாக்கக்கூடியது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Related Stories: