புழல் மத்திய சிறையில் பெண் கைதிகளிடம் செல்போன், சிம் பறிமுதல்; புழக்கம் அதிகரிப்பால் காவலர்கள் திணறல்

சென்னை: புழல் மத்திய சிறை வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் புழல் சிறையின் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் சிறைக் காவலர்கள் அவ்வப்போது அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, செல்போன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நடத்திய சிறைக் காவலர்களின் அதிரடி சோதனையில், ஒரு பெண் கைதி பயன்படுத்திய செல்போன், ஆண்கள் பிரிவில் 2 கைதிகள் பயன்படுத்திய செல்போன், சார்ஜர், பேட்டரி போன்றவற்றை கைப்பற்றினர். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பெண்கள் பிரிவில் தனித்தனி அறைகளில் இருந்த பெண்களிடம் சிறைக்காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், 2 பெண் கைதிகளிடம் இருந்து செல்போன், சார்ஜர், சிம்கார்டு, பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறை வளாகத்தில் அடிக்கடி ரோந்து, கண்காணிப்பு, அதிரடி சோதனை நடத்தியும்  கைதிகளுக்கு எப்படி செல்போன், கஞ்சா உள்பட பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தி  வரப்படுகின்றன என்பது தெரியாமல் சிறைக்காவலர்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து, புழல் சிறையின் துணை அலுவலர் வசந்தி கொடுத்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். புழல் சிறையில் அடிக்கடி ரோந்து, கண்காணிப்பு, அதிரடி சோதனை நடத்தியும் கைதிகளுக்கு எப்படி செல்போன், கஞ்சா உள்பட பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இதற்கு சிறைக்காவலர்கள், அதிகாரிகள் உள்பட யாரேனும் உடந்தையாக இருக்கிறார்களா என்பது குறித்தும், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: