வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டது: உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை: சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டதாக கூறி உத்தவ் தாக்ரே, திருடனுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று ஆவேசமாக கூறினார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு வழங்கி நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் மூலம் உத்தவ் தாக்கரே அணியினர் சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் பாந்தராவில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆதரவாளர்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே  ஆவேசமாக கூறியதாவது:

வில் மற்றும் அம்பு திருடப்பட்டுவிட்டது. திருடனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அவர் பிடிபட்டார். நான் அந்த திருடனுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் வில் மற்றும் அம்புவுடன் வெளியே வாருங்கள். எரியும் ஜோதியின் மூலமாக அதனை எதிர்கொள்வோம். தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். திருடனுக்குத் தேர்தலில் பாடம் புகட்டும் வரை ஓயக் கூடாது.   ஏனெனில் ஒரு கட்சியில் இதே போன்ற நிலை முன்பு உருவானால் கட்சி, சின்னம் முடக்கப்படும்.

ஆனால் ஒன்றிய அரசின் அழுத்தத்தால் இப்படி நடந்துள்ளது. அந்த தேர்தல் கமிஷனர் ஓய்வுபெற்ற பின் கவர்னர் பதவியை பெறலாம். ஆனால் சிவசேனா யாருடையது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.  திருடனுக்கு தாக்கரே பெயர், பாலாசாஹேப்பின் புகைப்படம் வேண்டும்.  ஆனால் சிவசேனா குடும்பம் வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: