×

மதுபான கொள்கை முறைகேடு டெல்லி துணை முதல்வரிடம் இன்று சிபிஐ விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22ம் ஆண்டு புதிய கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியது. இதில் முறைகேடு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கவர்னரின் பரிந்துரையின் பேரில்,  சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.  இந்த வழக்கில்  கலால் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்வர் சிசோடியாவிடம் கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வரவழைத்து விசாரணை நடத்தியது.

அதன்பின் அவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.  இந்த வழக்கில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில்  விடுமுறை நாளான இன்று விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சிசோடியாவை சிபிஐ  அழைத்துள்ளது. இதை ஏற்று சிசோடியா இன்று சிபிஐ முன்பு ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.

Tags : CBI ,Delhi ,Deputy Chief Minister , CBI probes Delhi Deputy Chief Minister on liquor policy violation today
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...