×

இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 48,698 பேர் பாதிப்பு, 1,183 பேர் உயிரிழப்பு, 64,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,183 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:* புதிதாக 48,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,01,83,143 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,183 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,95,565 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* நாட்டின் இதுவரை 31,50,45,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

The post இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 48,698 பேர் பாதிப்பு, 1,183 பேர் உயிரிழப்பு, 64,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : India ,Corona ,Central Health Department ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...