×

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு இந்தியா தகுதி சீனாவுடன் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி லீக் ஆட்டத்தில் கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் ஹாங்காங்குடன் இந்தியா மோதியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயாசென் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-16, 21-11 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-21 21-7 21-9 என்ற கணக்கில் வென்றார். பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-13, 21-12 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் முதல் பதக்கத்தை உறுதி செய்தது. அரையிறுதியில் இன்று சீனாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

Tags : Asian Badminton Championship ,India ,China , Asian Badminton Championship: India qualifies for semifinals with China today
× RELATED சொல்லிட்டாங்க…