×

கொளத்தூர் வாரச்சந்தையில் ரூ2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேட்டூர்: கொளத்தூர் வாரச்சந்தையில் ரூ2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடும் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டும். கொளத்தூர் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இருந்தும், தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் மற்றும் ஏரியூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோபிநத்தம் பகுதியில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவர்.

வனப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரைகளில் பசுமையான செடி, கொடிகளையும், மூலிகை தாவரங்களையும் தின்று வளர்வதால், இந்த சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்தவை. இதனால், கொளத்தூர் சந்தையில் ஆடுகள் வாங்க ஏராளமான வியாபாரிகள் வந்து செல்வர். நேற்றைய சந்தைக்கு சுமார் 5,000 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ7,000க்கும், கிடாய் ₹10,000க்கும் விலை போனது. மொத்தம் 5000 ஆடுகள் மற்றும் குட்டிகள் ரூ2.50 கோடிக்கு விற்பனையானது.

Tags : Kolathur , Goats sold at Kolathur weekly market for Rs 2.5 crore
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...