புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் பதவி ஏற்றுக்கொண்டார். சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த நூறு நாட்களில் மட்டும் இவரது தலைமையில் செயல்படும் உச்ச நீதிமன்றத்தால் மொத்தம் 14,209 வழக்குகள் விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளது. இவைத்தவிர உச்ச நீதிமன்றத்தின் மொத்த அலுவல் நடவடிக்கைகளும் டிஜிட்டல் வாயிலாக மாற்றப்பட்டது. இந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றம், பதிவாளர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 40 லிருந்து 80 ஆக உயர்வு, நீதிமன்ற அமர்வுகள் கையாளும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது.