×

இந்திக்காரங்க...நீங்க எதுக்கு வர்றீங்க’: ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்

சென்னை: சமீப காலமாக வடமாநிலங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது, வங்கி கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம், என தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றத்திற்கு பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்களே. இப்படி ஒரு பக்கம் சென்றாலும், தமிழ்நாட்டு மக்களும் வடமாநில நபர்களுக்கு எதிராக யூடூபில் வீடியோ பதிவிடுவது,வடமாநில நபர்களை கண்டால் துன்புறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில நபரை தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் இந்திகாரங்க நீங்க எதுக்கு வர்றீங்க,,? நாங்கள் தான் இங்கு இருக்கிறோமே? நாங்களே எல்லா வேலையையும் பார்த்து கொள்கிறோம் நீ கெளம்பு என ரயிலில் கூட்ட நெரிசலில் நின்று இருக்கும் நபர்களை தமிழ் பேசும் நபர் ஒருவர் கண்மூடிதனமாக தாக்குகிறார். அதை கூட்ட நெரிசலில் உள்ள ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் ஆபாசமாக பேசுதல்,காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன தான் வடமாநிலத்தவர்களாக இருந்தாலும் இப்படி துன்புறுத்துவது கொடூரம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Tags : Indhikaranga ,Northman , Indian, why are you coming, attack on a moving train, a northerner
× RELATED தேனி – போடி அருகே துவக்கப் பள்ளியில்...