×

வடகொரியா அரசு அதிரடி கிம்ஜாங் உன் மகள் பெயரை பயன்படுத்த திடீர் தடை

பியாங்யாங்: வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். தற்போது அவரது 10 வயது மகள் ஜூ ஏ என்பவரை பொதுவெளிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். எனவே அவரது அரசியல் வாரிசாக ஜூ ஏ நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் மகள் ஜூ ஏ பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதே பெயரை வேறு யாரும் தங்கள் மகள்களுக்கு வைத்து இருந்தால் அதை மாற்றவும் அவர் அறிவித்து உள்ளார். தனது மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags : North Korean government ,Kim Jong Un , The North Korean government has suddenly banned the use of Kim Jong Un's daughter's name
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை