×

கர்நாடக வனத்துறைக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாலாறும், காவிரியும் கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம்போல மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கோவிந்தப்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா கொல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த ராஜாவின் சடலம் பாலாறு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனத்துறை தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் மீது இரக்கமற்று, துப்பாக்கி சூடு தொடர்ந்து நடத்தி வருகிறது. கர்நாடக வனத்துறையின் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மரணமடைந்த மீனவர் ராஜா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளவும், மீனவர் ராஜா குடும்பத்துக்கு மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Mutharasan ,Karnataka , Karnataka Forest Department, Mutharasan, Kandanam
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...