×

தாம்பரத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி: கலெக்டர் பங்கேற்பு

தாம்பரம்: தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பங்கேற்றார். மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நேற்று தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டம் மற்றும் மாவட்ட அலுவலகம் சார்பில் அரசின் திட்டங்கள், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான காட்சி போன்ற பல்துறை காட்சி அரங்கங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சொற்பொழிவாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், யுகபாரதி, ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நமது வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் சமூக மரபின் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சியே ‘‘மாபெரும் தமிழ் கனவு’’ என மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Grand Tamil Dream Show ,Tambaram , Grand Tamil Dream Show at Tambaram: Collector participation
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்