ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்: 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

மதுரை: குடியரசு தலைவர்  மதுரைக்கு  வருகை புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  போக்குவரத்து மாறுதல்களை நகர போலீசார் அறிவித்துள்ளனர். போக்குவரத்துப்பரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ மதுரை  விமானநிலையம், விமான நிலையம் முதல் தெற்கு வாசல் சந்திப்பு வரை, தெற்கு வெளி வீதி முழுவதும் தெற்குவாசல் சந்திப்பு முதல் கிழக்கு வாசல் சந்திப்பு  வரை, கிழக்கு வெளிவீதி முழுவதும், காமராஜர் சாலை விளக்குத்தூண் முதல் கீழ  வாசல் சந்திப்பு வரை, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, வெண்கல கடை தெரு,  தெற்கு ஆவணி மூல வீதி பழைய காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஜடாமுனி கோவில்  சந்திப்பு, கிழக்கு மாசி வீதி- மொட்டை பிள்ளையார் கோவில் முதல் விளக்குத்தூண் வரை, அழகர் கோவில் சாலை இருபுறமும் கோரிபாளையம் முதல் தாமரை  தொட்டி வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையின் போது தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து  பெருங்குடி வழியாக மண்டேலா நகர் செல்லக்கூடிய பேருந்துகள் முத்து பாலம்,  தேவர் பாலம் வழியாக பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம்  செம்பூரணி சாலை வழியாக நான்கு வழிச்சாலையை அடைந்து மண்டேலா நகர் செல்ல  வேண்டும். நகரில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள்  அனைவரும் ரிங்ரோடு சாலையில் விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு  வழிகளை பயன்படுத்தியும் மற்றும் திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை விமான  நிலையம் செல்லக்கூடிய பயணிகள் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் செம்பூரணி  சாலை வழியாக நான்கு வழிச்சாலையை அடைந்து மண்டேலா நகர் சென்று பெருங்குடி  வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

இவ்வாகனங்கள் வில்லாபுரம்  அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் மற்றும் அவர்களுக்கான  வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு வாகனத்தில்  வரக்கூடிய பயணிகள் வாகன வழித்து எண் 2ம் மட்டுமே பயணிகளை இறக்கிவிடவோ  அல்லது ஏற்றிக்கொண்டு செல்லவோ அனுமதிக்கப்படுவர். மேலும் பயணிகளை  ஏற்றிச்செல்லவோ மற்றும் இறக்கிவிடவோ வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள்  பயணிகளின் பயண சீட்டின் நகல் காப்பியை தனது செல்போனில் வைத்திருக்க  வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: