×

வட்டவிளை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி

கருங்கல்: கருங்கலில் இருந்து பூக்கடை வழியாக தக்கலை செல்லும் சாலை உள்ளது.வட்டவிளையில்  இந்த சாலையில் குறுக்காக கீழ்ப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பரில் இரட்டை ரயில் பாதை பணிக்காக சாலை மேம்பாலம் துண்டிக்கப்பட்டது. பின்னர் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இரட்டை ரயில் பாதை பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதுபோல வட்டவிளையில் சாலை மேம்பாலம் அமைக்க, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இரும்பு பீம்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மேல் காங்கிரீட் போடப்பட்டு ரெடிமேட் பாலமாக அமைகிறது. இந்த பணிகளை திருவனந்தபுரம் கோட்ட தலைமை துணை பொறியாளர் சந்துரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ‘சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 20 நாட்களில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.

Tags : Vattavilai , Construction of flyover near Vattavilai
× RELATED தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி