மீனவர் ராஜா குடும்பத்திற்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மீனவர் ராஜா குடும்பத்திற்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் ராஜா குடும்பத்திற்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: