×

‘லிவ்-இன்’ பார்ட்னரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: தேசிய மகளிர் ஆணைய தலைவர் கருத்து

புதுடெல்லி: லிவ்-இன்  உறவு பார்ட் னர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கூறினார். டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் சாஹில் கெஹ்லாட் என்பவர், தனது லிவ்-இன் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த கொடூரமான சம்பவம் நடந்தது. அதற்கு முன்னதாக மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவரது லிவ்-இன் காதலனால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா அளித்த பேட்டியில், ‘லிவ்-இன்  உறவு பார்ட்னர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற  சம்பவங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோருக்கும் பொறுப்புண்டு. தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும். ‘லிவ்-இன்’ உறவை பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை மரியாதையுடன் நடத்த வேண்டும்’ என்றார்.


Tags : National Commission for Women , Women are not protected by 'live-in' partners: National Commission for Women chief
× RELATED ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ