திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய மாஜி அமைச்சர் மீது பலாத்கார வழக்கு: அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்தது அம்பலம்

புனே: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் மீது புனே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த சிவசேனா கட்சியின் முன்னாள் மாநில அமைச்சர் உத்தம் பிரகாஷ் கண்டரே என்பவர், கடந்த 2012ல் அமைச்சராக இருந்த காலத்தில் 37 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பிப்வேவாடி போலீசில் அளித்த புகாரில், ‘முன்னாள் அமைச்சர் உத்தம் பிரகாஷ் கண்டரே (65), 2012ம் ஆண்டு முதல் புனேயில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் என்னை சந்திக்க அழைத்தார். நானும் அங்கு சென்றேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஏற்கனவே அவர் என்னை பலமுறை அணுகினார். இந்த நிலையில் அன்றைய தினம் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் எனக்கு பணம் கொடுத்து அனுப்பினார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டதற்கு, என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.

எனவே அவர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து பிப்வேவாடி இன்ஸ்பெக்டர் சங்கீதா ஜாதவ் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண், முன்னாள் அமைச்சரின் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவரது புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376,377,406,420,506 (2) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: