தகாத உறவை கண்டித்ததால் கணவனுக்கு 2 முறை விஷம் கொடுத்து கொன்ற மனைவி: ‘மாரடைப்பால் மரணம்’ என்று நாடகமாடியது அம்பலம்

ஜலந்தர்: பஞ்சாபில் பக்கத்து வீட்டுக்காரருடன் தகாத உறவை வைத்திருந்த மனைவியை கணவர் கண்டித்ததால் அவருக்கு 2 முறை விஷம் கொடுத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் ஃபில்லூரைச் சேர்ந்த கபில் குமார் (40). இவரது மனைவி ஷில்பா (38). தம்பதியருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் ஷில்பாவுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜஸ்வந்த் ராஜ் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஜஸ்வந்த் ராஜ்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஷில்பா - ஜஸ்வந்த் சிங் கள்ளத் தொடர்பு விவகாரத்தை கபில் குமார் கண்டித்துள்ளார்.

ஆனால் தங்களது காதலுக்கு கபில் குமார் இடையூறாக இருப்பதால், அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 12ம் தேதி, தனது கணவருக்கு வெல்லத்தில் விஷத்தன்மை கொண்ட செல்போஸ்-யை (அலுமினியம் பாஸ்பைட்) கலந்து ஷில்பா கொடுத்தார். அதனை வாங்கி சாப்பிட்ட கபில் குமார், அடுத்த சில மணி நேரங்களில் வாந்தி எடுத்தார். அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் 2 நாட்கள் வைத்திருந்து குணப்படுத்தி அவரை அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வீட்டிற்கு வந்ததும், கபில் குமாருக்கு கொடுக்கும் மாத்திரையில் அடைத்து செல்போஸை ஷில்பா கொடுத்தார். அதனை சாப்பிட்ட அவர் மூச்சுத் திணறி இறந்துவிட்டார். ஆனால் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் ஷில்பா கூறினார். அவர்களும் அதனை நம்பினர்.

ஆனால் கபில் குமாரின் உறவினரான வருண் மிட்டல்,  ஷில்பாவுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜஸ்வந்த் ராஜிக்கும் உள்ள கள்ளத்தொடர்பு குறித்து போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து கபில் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ேபாலீசார் அனுப்பி  வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கபில் குமார் விஷம் குடித்ததால்  இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் ஷில்பாவையும், பக்கத்து வீட்டுக்காரர் ஜஸ்வந்த் ராஜியையும் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அவர்கள் கபில் குமாரை விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டனர். அதனால் இருவர் மீதும் ஐபிசி 302, 34 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: