×

டெலிவரி ஊழியர்களுக்காக விரைவில் ஓய்வு மையங்கள் அறிமுகம்: ZOMATO நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு குவியும் பாராட்டு

சென்னை: உணவு டெலிவரியில் ஈடுபடும் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ள வசதியாக ஓய்வு மையங்கள் அமைக்கப்படும் என ZOMATO தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று Zomato, ஓரிடத்தில் இருக்கும் பயனாளருக்கு அவர்கள் விரும்பிடும் இடத்தில் உணவை பர்ச்சஸ் செய்து குறித்த நேரத்திற்கு விரைவாக சென்று அவர்களிடம் ஒப்படைப்பதே இந்நிறுவனத்தின் முதன்மையான வேலை. இதில் ஆயிரகணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 24 மணிநேரமும் உணவு டெலிவரி செய்யும் உணவு விநியோக நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை சரியாக நடத்துவதில்லை என்று புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஷெல்டர் புராஜெக்ட் என்ற திட்டத்தின்கீழ் ஓய்வெடுக்கும் வசதியினை அந்த நிறுவனம் ஏற்படுத்தி தர இருக்கிறது. அந்த ஓய்வறைகளில், அதிவேக வைஃபை இணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், முதலுதவி மருந்துகள் செல்போன் சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதி, தூமையான குடிநீர், கழிவறை ஆகிய வசதிகள் அந்த ஓய்வு மையங்களில் இருக்கும் என ZOMATO நிறுவன தலைமை செயல் அலுவலர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஓய்வு மையங்களை Swiggy போன்ற பிற டெலிவரி முகமையின் ஊழியர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த rest points திட்டம், ஊழியர்களின் தேவையை புரிந்து கொண்டு வரப்பட்டுள்ள நல்ல திட்டமாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

Tags : ZOMATO , Delivery, staff, leisure center, ZOMATO, compliments
× RELATED ஜொமாட்டோவின் 4-வது காலாண்டு லாபம் ரூ.175 கோடி!!