×

ஆஸ்திரேலியா இறங்கி சண்டை செய்ய வேண்டும்: ரவிசாஸ்திரி பேட்டி

புதுடெல்லி:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டி: ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லி டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்தவித சவாலையும் தராமல் முதல் போட்டியில் அடங்கியதைப் பார்க்க எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அவர்கள் 2வது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டனர். ஆஸ்திரேலியா இறங்கி சண்டை செய்ய வேண்டும். இல்லையென்றால் தொடரை முழுமையாக இழக்கும் ஆபத்து உள்ளது. ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுடைய இந்திய ஐபிஎல் நண்பர்களை இப்பொழுது விட்டுவிட்டு தங்களுடைய ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி, பின்பு தங்கள் நட்பை தொடரலாம் என்று நான் கூறுகிறேன்.

ஆஸ்திரேலியா வீரர்கள் கண்ணாடிக்கு முன் நின்று நான் மோசமானவர்கள் இல்லை என்று கூறிக் கொள்ள வேண்டும். இந்தியாவை தோற்கடிக்க வேண்டும், இல்லை அச்சுறுத்த வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணி தனது ஏ பிளஸ் ஆட்டத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அதாவது நாங்கள் ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்திய ஆட்டத்தைப் போல. இது ஒன்றும் முடியாதது கிடையாது. நாங்கள் அடிலெய்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, அங்கிருந்து கடுமையாக சண்டை செய்து நாங்கள் தொடரை வென்றோம். எனவே ஆஸ்திரேலியா தொடரை இங்கு வெல்வது என்பது சாத்தியமற்றது கிடையாது, என தெரிவித்தார்.

Tags : Australia ,Ravi Shastri , Australia must come down and fight: Ravi Shastri Interview
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...