×

ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி 16வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை

மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை பதவி வகித்த அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினா (58), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16வது மாடியில் விழுந்து இறந்ததாக ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் மெரினா யாங்கினாவின் உடலை பொதுமக்கள் பார்த்தனர். தகவலறிந்த போலீசார் மரினா யாங்கினாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

உக்ரைன் உடனான ரஷ்யப் போரில் அதிபர் புடின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரிமா யாங்கினா செயல்படுத்தி வந்தார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் மகரோவ், சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் பல முக்கிய பிரபலங்கள் மர்மமாக இறந்துள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Russian security officer commits suicide by falling from 16th floor
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...