×

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கிக்கு உதவ நேட்டோ தயார்: பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர திட்டம்..!!

அந்தாக்யா: நிலநடுக்கத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஆனால், இதுவரை ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கும் துருக்கியில், பெரும் பாதிப்புக்கு உள்ளான துறைமுக நகரமான ஹிஸ் கேட்ரன் ஏற்பட்டுள்ள பாதிப்பை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்தார். துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹுலுசி ஆகரும் உடன் சென்றார். ஹேட்டே நகரில் பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. கூடார வீடுகளுக்கான பொருட்களை வான்வழியே எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : NATO ,Turkey , Earthquake, Turkey, NATO, Temporary Housing
× RELATED பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…