×

ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டின் கட்டுமானப் பணிகள் தீவிரம்: மண்டல இன்ஜினியர் ஆய்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட்டில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முயற்சியால் புதிய கடைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கம்பி, சிமென்ட், மண்ணின் ஈரப்பதம் மற்றும் தரம் மற்றும் காப்பிலியப்பட்டியில் கட்டப்பட்டிருக்கும் உரக்கிடங்கு உள்ளிடவற்ைற மதுரையில் இருந்து வந்த நகராட்சி நிர்வாக மண்டல இன்ஜினியர் மனோகரன் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் கூறும்போது, காந்தி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் பணிகள் கடந்த ஜன.23ம் தேதி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.21.25 கோடி செலவில் 122 கடைகளுடன், அலுவலக அறைகள், ஏடிஎம் மையம், உணவு விடுதி, காத்திருப்பு கூடம், கண்காணிப்பு கேமரா, தங்கும் விடுதி, குடிநீர் வசதி, கழிப்பறை தரமான தார்சாலை உள்ளிடைவைகளுடன் இந்த மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை தரமான முறையில் விரைவில் முடிப்பதற்கு ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காப்பிலியப்பட்டியில் உரக்கிடங்கு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றார். இந்நிகழ்வில் ஆணையாளர் (பொ)சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Gandhi Vegetable Market ,Otansatrah , Construction Intensity of Gandhi Vegetable Market located at Ottanchatra: Zonal Engineer Survey
× RELATED ஓணம் பண்டிகை எதிரொலி; ஒட்டன்சத்திரம்...