ரோகித், கோலி குறித்து சர்ச்சை பேச்சு!: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சேத்தன் சர்மா..!!

டெல்லி: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை சேத்தன் சர்மா அனுப்பினார். தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய வீரர்கள் பற்றி சேத்தன் சர்மா சர்ச்சையாக பேசியிருந்தார். கங்குலி, கோலி உள்ளிட்டோர் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் உடல் தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சேத்தன் சர்மா கூறியிருந்தார். ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் பேசிவிட்டு செல்வார்கள். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், அவை என் வீட்டை விட்டு வெளியே வராது என்றும் சேத்தம் சர்மா தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்த பி.சி.சி.ஐ, சேத்தன் ஷர்மா அளவுக்கு அதிகமாக பேசி வருவதாகவும் தெரிவித்து இருந்தது. சேத்தன் சர்மாவின் பேச்சை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து செய்தி நிறுவனங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. இந்திய அணி தொடர்பான பல விஷயங்களை கசியவிட்டதாக சேத்தன் சர்மா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்திய அணியில் நிலவி வந்த குளறுபடிகள் பலவற்றை சேத்தன் சர்மா கசியவிட்டதாக  குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். சேத்தன் சர்மாவின் ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக் கொண்டார்.

Related Stories: