×

சென்னை கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் 759 சிறுவர்கள் மீட்பு

சென்னை: சென்னை கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் கடந்த ஆண்டு 759 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே பாதுகாப்புப் படையினர் பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து கோபித்துக் கொண்டும், ஆதரவில்லாத மற்றும் காணாமல் போன, சிறுவர்களை கண்டறிந்து மீட்பதற்கான முயற்சியை மேற்க்கொண்டு வருகிறது. மேலும் ரயில்வே அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளின் சிறந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் 2022ம் ஆண்டிலும் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது குழந்தை உதவி மையங்கள் முக்கிய ரயில் நிலையங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குழந்தைகளை மீட்க இந்திய ரயில்வேயில் தீவிர இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை, சென்னை கோட்டம் பிரிவு மூலம் 2022ம் ஆண்டில் 759 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் https:// indianrailway.gov.in ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் இணைப்பதில் ரயில்வே பாதுகாப்பு படை முக்கியப் பங்காற்றியுள்ளது.

Tags : Chennai Kottam Railway Security Force , Chennai Division, Railway Protection Force, Rescue of 759 children
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்