கழிவுநீரை முறைகேடாக வெளியேற்றிய 2 கழிவுநீர் லாரிகள் பறிமுதல்: சென்னை குடிநீர் வாரியம் அதிரடி

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தில் உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சோழிங்கநல்லூர் பகுதியில் ஒக்கியம்மடுவு அருகில் முறைகேடாக கழிவுநீரை திறந்தவெளியில் வெளியேற்றிய இரண்டு தனியார் கழிவுநீர் வாகனங்கள் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளால் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட்டது.

இந்த லாரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை திறந்தவெளிகளிலோ அல்லது நீர்நிலைகளிலோ வெளியேற்றுவது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: