தமிழக மீனவர்கள் தாக்குதல் ஒன்றிய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை படகுகளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினத்தை சேர்ந்த முருகன் மற்றும் 6 மீனவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்களை 4 இலங்கை படகுகளில் வந்தவர்கள் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர். இதில் முருகனின் கைவிரல்கள் அறுக்கப்பட்டு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த விஷயத்தில் நீங்கள் தலையீட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

Related Stories: