உணவக உரிமையாளர்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு சாப்பிட தனி அறை கூடாது: போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை: தொலைதூரம் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்படும் உணவகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட தனி அறை ஒதுக்கக்கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், மற்ற ஊர்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வெளியூர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் சாப்பிட வசதியாக, வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும். டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட தனியிடம் ஒதுக்கப்படும்.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கப்பட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: