×

40 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர் பெற்றோரைத் தேடி சேலம் வந்த டென்மார்க் பெண்

சேலம்: டென்மாக்கை சேர்ந்தவர் லீசி(44). இவர் கணவர் பேட்ரிக் என்பவருடன், சேலம் கருப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு நேற்று வந்தார். அப்போது அவர், தனது ஊர் சேலம் கருப்பூர் எனவும் பெற்றோரை தேடி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரது பெற்றோர் யார்? என அவருக்கு தெரியவில்லை.

இதுகுறித்து லீசி கூறியதாவது:
சென்னை பல்லாவரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் சில்ட்ரன்ஸ் ஹோமில், 1980ம் ஆண்டு  என்னை சேர்த்தனர். 1982ல் டென்மார்க் தம்பதிகளான ராஸ்-முசன் என்னை தத்தெடுத்து டென்மார்க் அழைத்துச் சென்றனர். அங்கேயே என்னை படிக்க வைத்து வளர்த்தனர். பின்னர், பேட்ரிக்கை திருமணம் செய்து கொண்ேடன். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது சொந்த கிராமத்தையும், பெற்றோரையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.

இதனால் பெற்றோரைத் தேடி இந்தியா வந்துள்ளேன். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தத்து கொடுப்பு தனியார் தன்னார்வ நிறுவனத்திடம் சென்று, எனது பூர்வீகத்தை தெரிந்த கொள்ள உதவுமாறு கேட்டேன். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கருப்பூர்தான் எனது சொந்த ஊர் என தெரியவந்தது. இதனால் தற்போது சேலம் வந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Salem , Adopted, parents, Danish woman from Salem
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...