×

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மதுரை, கோவை வருகை

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சிவராத்திரி தினமான நாளை பகல் 12 மணியளவில் ஜனாபதிபதி திரவுபதி முர்மு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். மேலும் கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதையொட்டி கோயிலை சுற்றி நேற்று முதல் ஐந்தடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விமான நிலையத்தில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் சாலைகளில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தரிசனத்தை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்க சுற்றுலா மாளிகை செல்ல இருப்பதால், சுற்றுலா மாளிகை வரை பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (18ம் தேதி) மதியம் கோவை வரவுள்ளார். மகா சிவராத்திரியையொட்டி கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்லவுள்ளார். அங்கே ஆதியோகி சிலை முன் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கோவை சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், 19ம் தேதி காலை காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்று புதுடெல்லிக்கு விமானத்தில் செல்லவுள்ளார். இதையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : President ,Dravupati Murmu ,Madurai ,Coimbatore , President Dravupati Murmu will visit Madurai and Coimbatore tomorrow
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...