சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத்தவர்கள் இங்கு கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, எளிதாகத் தப்பிச் சென்று தங்கள் சொந்த மாநிலத்தில் பதுங்கிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது. வடமாநிலத்தவரின் இந்த அட்டூழியங்கள் தமிழக மக்களுக்கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு, வாக்காளர் அட்டை-குடும்ப அட்டை-ஆதார் அட்டை போன்றவற்றை தமிழக அரசு வழங்க கூடாது. நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல், வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். தமிழகத்தில் இனியும் வடமாநிலத்தவர்கள் வருவதை தடுக்க வேண்டும்.
