×

30 நாட்டு தேர்தல் முடிவுகளில் இஸ்ரேலிய ரகசிய குழு சதி?: இங்கிலாந்தைச் சேர்ந்த தி கார்டியன் பத்திரிக்கை பரபரப்பு அறிக்கை

லண்டன்: இஸ்ரேலிய தனியார் உளவு நிறுவனம் ஒன்று இந்தியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த பொது தேர்தல்களில் சதி செய்து அவற்றின் முடிவுகளை மாற்றியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற நாளிதழான தி கார்டியன் பத்திரிகையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த டீம் ஜோர்கெ என்ற குழு, சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் மூலமும், ஊடுருவல் மூலமும் மோசடிகளை நடத்தி தேர்தல் முடிவுகளை மாற்றியதென்பது குற்றச்சாட்டாகும்.

இந்த நிறுவனம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளிடமிருந்து பல ஆயிரம்கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு பொதுமக்களிடம் தந்திரமாக போலியான ஒரு பொது கருத்தை உருவாக்கி தங்களுக்கு வேண்டியவர்களை வெற்றி பெற வைத்தது என்றும் கார்டியன் பத்திரிக்கையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சர்வதேச ஊடகவியலாளர்கள் பல மாதங்கள் பணியாற்றி தயாரித்துள்ளனர்.

இஸ்ரேலிய உளவு நிறுவனத்தின் மோசடியை பெங்களூருவை சேர்ந்த ஊடகவியலாளரும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை கடுமையாக எதிர்த்து வந்தவருமான கவுரி லங்கேஷ் முதலில் கண்டுபிடித்தார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. In the Age of False news அதாவது போலி செய்திகளின் காலத்தில் என்ற தலைப்பில் அந்த கட்டுரையை கவுரி லங்கேஷ் எழுதி முடித்த சில மணி நேரங்களில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது அறிக்கையை அடியொற்றிதான் தாங்கள் இந்த ஆய்வை நடத்தியதாக சர்வதேச ஊடக விசாரணை முகவை கூறியுள்ளது. இந்தியாவில் எந்த தேர்தலில் என்ன சதி செய்தது என்ற விவரங்கள் அதில் வெளியிடப்படவில்லை. 


Tags : UK , election, result, israeli, secret, conspiracy, england, the guardian, report
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...